Breaking News

நடிகர் சூர்யா அடுத்த படம் வெற்றி பெற மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா வழிபாடு செய்தார்.


ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க  உள்ள சூர்யா 45 திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வழிபாடு செய்தார்.கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன்,உதவி ஆணையர் கைலாசமூர்த்தி,அறங்காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடன் இருந்தனர்.
படக்குழுவினரின் கேமரா கோவில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்தனர். மாசாணியம்மன் கோவிலில் பூஜை செய்து வழிபட்ட பிறகு படப்பிடிப்பு நடத்தினால் படம் வெற்றி பெறும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.




No comments

Thank you for your comments