காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் 71 வது கூட்டுறவு வார விழாவின் 3 வது நாள் நிகழ்வாக மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமை இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தொடக்கி வைத்து ரத்ததானம் வழங்கிய 41 கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கும் பரிசும்,பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
பெரிய காஞ்சிபுரம் மற்றும் சின்னக்காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கிகள் மற்றும் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் வா.சரவணன், புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் கர்ணன்,ஸ்ரீனிவாசு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments