12 கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது எஸ்ஆர்எம் கல்விக் குழுமம்
எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் உன்னத் பாரத் அபியான் என்னும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 12 கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக பனைமர விதைப்பினை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 12 வது பனைமர விதைப்பு முகாமினை எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்களோடு இணைந்து சனிக்கிழமை (16.11.2024) மின்னல் சித்தாமூர் பொதுப்பணித்துறை கண்மாயில் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளரான முனைவர் திருமுருகன் அவர்கள் தலைமை உரையாற்றினார் மின்னல் சித்தாமூர் பஞ்சாயத்து தலைவர் திரு பாலாஜி அவர்கள் சிறப்புரையாற்றினார் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் திருஞான குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரான முனைவர் மகேந்திரன், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் அன்பரசன் அவர்கள் மாணாக்கர்களை ஒருங்கிணைத்தனர் முனைவர் பிரதீப் அவர்கள் பனையினால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு வழங்கினார்.
உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் எஸ் ஆர் எம் வேளாண் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆகியோர் இந்நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
No comments
Thank you for your comments