உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகள் கைது.!
கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகள் உல்லாச விடுதி நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருதமலை அடிவாரத்தில் ஹோட்டல் நடத்திவரும் ராம்குமார் என்பவர் சம்பவத்தன்று தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட் செல்லும் வழியில் ஓனம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்பின் தெரியாத ஜெயந்த் என்ற நபர் தன்னிடம் அறிமுகமாகி பொம்மானாம்பாளையம் பகுதியில் உல்லாச விடுதி நடத்துவதாகவும் ரூ1500 கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறி அழைத்து சென்று ராம்கிராம் என்ற நபரிடம் 3 அழகிகளை காண்பிக்கும் மாறி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
அவர் மூன்று அழகிகளை அழைத்து ரூ1500 கொடுத்தால் இதில் யாருடன் வேண்டுமானாலும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார். ராம்குமார் ஏடி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் பிராங்கிளின் தலைமையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்...


No comments
Thank you for your comments