கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் 15வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தினவிழா நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ்,தலைமையாசிரியை டாக்டர் பூனம் சியால் ஆகியோர் பிரதம அதிதிக்கு ஓர் கைவினைப் பாராட்டும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
நாம் எப்படி நினைக்கிறோம் உணர்கி றோம் மற்றும் செயல்படுகிறோம்,மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் தேர்வுகள் எழுதுவது மேலும் 'ஆரோக்கியமான உடல் வலிமையான மனம்,மன உறுதி மற்றும் நேர்மறை எண்ணம் ஆகியவை கடின உழைப்பின் கூறுகள்"என்று குறிப்பிட்ட அவர் இது வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு நடனமும் நாடகப்பரபரப்புகளும் கொண்ட ஒரு சிறந்த நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பல்வேறு நடன,நாடக பாணிகளையும் கருப்பொருட்களையும் காட்சிபடுத்தினார்கள், பஞ்சபூதங்களின் உயிர்ப்பான நடனம், அதன் பின்னர் மெய்சிலிர்க்கும் காந்தாரா நடனம்,சீன தேச பாரம்பரிய நடனக்கலை,குழு ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் நாடகம் மற்றும் கருப்பொருட்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் ராக் இசைக்குழுவின் மகிழ்வான நிகழ்ச்சியும்,அதைத் தொடர்ந்து ஒரு ஆத்மார்த்தமான அழைப்பிதழ் நடனம், UV நிகழ்ச்சியானது நடிப்பிற்கு கூடுதல் அழகையும் சேர்த்தது,இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





No comments
Thank you for your comments