12.11.2024 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருப்பெரும்புதூர் கோட்டம், வடக்குப்பட்டு 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வடக்குப்பட்டு 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை புதுக்கோட்டை, வடக்குப்பட்டு வளையகருணை, உமையாள் பரனச்சேரி, ஆப்பூர், சேந்தமங்கலம், வஞ்சுவான்சேரி, செரப்பனஞ்சேரி, நாவலூர், வட்டாம்பாக்கம், சிறுவான்சூர், ஒரத்தூர், சென்னாகுப்பம், வைப்பூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments