Breaking News

27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி!

எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் டிஜில் ராவ்; ராயல் என்பீல்டு ஜிடி கான்டினென்டல் கோப்பை பிரிவில் நவநீத் சாம்பியன் பட்டம் வென்றனர்.



கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் 27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் டிஜில் ராவ் மற்றும் ராயல் என்பீல்டு ஜிடி கான்டினென்டல் கோப்பை பிரிவில் நவநீத் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.கோவையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்பே 22 வயதான பெங்களூரைச் சேர்ந்த இளம் வீரர் டிஜில் ராவ் ஏற்கனவே அதிக புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் நேற்றைய போட்டியின் இவரது துவக்கம் உற்சாகமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த பந்தய வீரர் சரண் விக்ரம் நேற்றைய முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் வெற்றி பெற்ற போதிலும், அது குறித்து டிஜில் சிறிதும் கவலைப்படாமல் இருந்தார். சாம்பியன்ஷிப் கோப்பை தனக்கே என்று உறுதியான நிலையில்,கடின முயற்சி யால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.இந்த வெற்றி குறித்து டிஜில் கூறுகையில்,இந்த சீசன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்தது.இவ்வளவு சிறப்பான போட்டியை நடத்தியதற்காக எனது குழுவிற்கும், ஜே.கே. டயர் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் நான் எனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்த காரணத்தால் அது எனக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 7 வருடங்களாக நான் போட்டிகளில் பங்கேற்று வருகிறே ன் அந்த வகையில் இந்த சீசன் என்னால் மறக்கமுடியாத ஒரு சீசன் என்று தெரிவி த்தார்.அவருக்கு அவரது பெற்றோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் உண்மையில்,காலை போட்டி துவங்கியவுடன் மொமண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்த சரண் விக்ரம் சிறப்பாக காரை ஓட்டி அனைவ ரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் பந்தயத்தின் ஒரு கட்டத்தில், அவரை மெஹுல் அகர்வால் மற்றும் டிஜில் ராவ் ஆகியோர் நெருங்கினர். ஆனால் பின்னர், டிஜில் எதையும் அதிகமாகச் செய்து முன்னேற முயற்சிக்கவில்லை.சரண் 21:24.212 நிமிடங்கள், மெகுல் அகர்வால் 21:25.349 மற்றும் டிஜில் ராவ் 21:25,545 என்ற வித்தியாசத்தில் போட்டியை நிறைவு செய்தனர். போட்டி குறித்து சரண் கூறுகையில்,நான் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றது என்பது எனக்கும் எனது அப்பாவுக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக உள்ளது.இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவி த்தார்.எல்ஜிபி பார்முலா 4 பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக வீரர்கள் எடுத்த புள்ளிகளைப் பொறுத்தவரை 87 புள்ளிகளுடன் டிஜில் ராவ் முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து 45 புள்ளிகளுடன் பால பிரசாத் இரண்டாவது இடத்திலும், 44 புள்ளிகளுடன் மெஹுல் அகர்வால் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த நவநீத் குமார்,10 சுற்றுகளை 13:01.601 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார்.அவரைத் தொடர்ந்து 13:02.411 நிமிடங்களில் அனிஷ் ஷெட்டி மற்றும் 13:02.503 நிமிடங்களில் மன்வித் ரெட்டி ஆகியோர் கடந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.நவநீத் முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு இழுபறி நிலவியது. அனிஷ் ஷெட்டி மற்றும் ரோஹன் ஆகிய இருவரும் தலா 36 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.இருப்பினும், அனிஷ் ஒரு பந்தயத்தில் எடுத்த புள்ளிகளை ரோஹன் இரண்டு பந்தயங்களில் பெற்றதால், அனிஷ் ஒட்டுமொத்தமாக இரண்டாவதாக அறிவிக்கப்பட்டார்.

No comments

Thank you for your comments