திருமங்கலத்தில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு கூட்டம்
காஞ்சிபுரம், நவ.19:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா நரேஷ்குமார் தலைமை வகித்தார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாட்சாயிணி, மாவட்ட திட்ட மேலாண்மைக் குழு உறுப்பினர் சரவணன்,வட்டார ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தா பலராமன் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியக் குழுவின் தலைவர் எஸ்.டி.கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான பணிஆணைகளை வழங்கினார்.
பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை, மாலை அணிவித்தும் கௌரவித்தார். கூட்டத்தில் தனி நபர் இல்லக் கழிப்பறையின் அவசியம்,திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் ஆகியன குறித்த துண்டுப் பிரசுரங்களும் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் ,மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் திருமலங்கம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சித்ரா,ரஜினி, ராஜேஸ்வரி, லோகேஷ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments