16.11.2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/33-11கிலோ வோல்ட் கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனால், 16.11.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 14.00 மணி வரை கடம்பத்தூர், பிரியாங்குப்பம், புதுமா விலங்கை, MGR நகர்,ஸ்ரீ தேவிகுப்பம் , செஞ்சி , பாணம்பாக்கம் , மணவூர் , ஆட்டுப்பாக்கம் , விடையூர், பெரியகளக்காட்டூர். சின்னகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர் அகரம் , வெண்மனம்புதுர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ/ப பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/33-11 கிலோ வோல்ட் திருமழிசை துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 16.11.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 14.00 மணி வரை திருமழிசை, வெள்ளவேடு , குத்தம்பாக்கம் , நேமம் , குண்டுமேடு, மடவிளாகம், உடையார் கோயில் , பிராயம்பத்து , கொத்தியம்பாக்கம், மணம்பேடு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ/ப பாலமுருகன் அவர்கள் தெரிவித்தார்கள்.
No comments
Thank you for your comments