காஞ்சிபுரத்தில் ஜோதிடர்கள் கருத்தரங்கம்
காஞ்சிபுரம், நவ.17:
சின்னக்காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் ஜோதிடகருத்தரங்கம் அக்சயா ஜோதிட வித்யாலயா அமைப்பின் சார்பில் நடைபெற்றது.
வேலூர் மைய ஆசிரியர் ப.கமலநாதன் தலைமை வகித்து ஜோதிடம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் பேசினார்.முன்னிலை வகித்த கிருஷ்ணகிரி மைய ஆசிரியர்கள் பழனிவேல் மனிதர்களும் கிரகங்களின் தாக்கங்களும் என்ற தலைப்பிலும்,கிருஷ்ணமூர்த்தி குலதெய்வத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் பேசினார்கள். காஞ்சிபுரம் மைய ஆசிரியர் என்.சேகர் வரவேற்று பேசினார்.
தர்மபுரி ஜோதிட மைய ஆசிரியர் கோபிநாத் கிரகங்களும் அவற்றின் குணங்களும் என்ற தலைப்பிலும், கிருஷ்ணகிரி பயிற்சி மைய மாணர் லிங்கண்ணன் வாஸ்து சாஸ்திரம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஜோதிடர்கள், ஜோதிட பயிற்சி மாணவர்கள் பலரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஜோதிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற கையேட்டினை வேலூர் ஆசிரியர் ப.கமலநாதன் வெளியிட்டு அதனை கருத்தரங்கில் பங்கேற்க வந்த அனைவருக்கும் வழங்கினார்.
No comments
Thank you for your comments