மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம் :
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
இன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 07.11.2024 முதல் 11.11.2024 வரை பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, உட்பிரிவு பட்டா, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், திருமண உதவித்தொகை, ஊனமுற்றோர் உபகரணங்கள் (ம) குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 141 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரியமுறையில் தீர்வு காணப்பட்டு, 106 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 1 கோடியே 6 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் காதொலிக் கருவிகள் - 2 பயனாளிகளுக்கு, வருவாய்துறை மூலம் வீட்டுமனைப் பட்டா - 43 பயனாளிகளுக்கு, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் (ம) ஈமச்சடங்கு உதவித்தொகை – 4 பயனாளிகளுக்கு, திருமண உதவித்தொகை - 7 பயனாளிகளுக்கு, கல்வி உதவித்தொகை - 8 நபர்களுக்கும், தற்காலிக கொடிய நோய்களுக்கான உதவித்தொகை-1 பயனாளிக்கு, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) - 23 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் PMJANMAN - 4 பயனாளிகளுக்கு, மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன் - 7 பயனாளிகளுக்கு, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இடு பொருட்கள்-2 பயனாளிகளுக்கு, தோட்டகலைத் துறை மூலம் இடு பொருட்கள்-2 பயனாளிகளுக்கு, கூட்டுறவு துறை மூலம் கால்நடை பராமரிப்புக் கடன் -1 பயனாளிக்கு, மகளிர் சுய உதவிக்குழு கடன் -2 நபர்களுக்கும் என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.1.06,98,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.அ.சார்லஸ், சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.ஜானகி செல்வம், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இம்முகாமினை தொடர்ந்து சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் உரையாடி, ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, பள்ளியிலுள்ள மதிய உணவு கூடத்தினை பார்வையிட்டு, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்கள். இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



No comments
Thank you for your comments