Breaking News

புரோக்கர்களின் ஆதிக்கத்தில் வேலூர் சார்பதிவாளர் அலுவலகம்

 வேலூர் :

வேலூர் சார்பதிவாளர் அலுவலகம் பரவலாக பரவியுள்ள லஞ்ச பேரற்றுக்கும், அதிகார விரோத பயன்பாட்டுக்கும் ஒரு நிழல் போல மாறி வருகிறது. பலமுறை லஞ்ச ஒழிப்புதுறை சோதனைகளில் தடுக்கப்பட்டும், அலுவலகத்தின் லஞ்ச தொடர்பான செயல்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. சமீப காலமாக, இந்த பத்திரப்  பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியில் பதிவு துறை ஒருங்கிணைந்த கட்டிடம், வேப்பமர தெரு, வேலப்பாடியில் இயங்கி வரும் வேலூர் சார்பதிவாளர் அலுவலகம் புரோக்கர்களின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலூர்  மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, சொத்துக்கள் வாங்க, விற்பனை செய்ய, பத்திரப்பதிவு பணிக்காக நாள்தோறும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். சமீப காலமாக, இந்த பத்திரப்  பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

திட்டமிடப்படாத லேஅடிவுட் பகுதிகளில் அனுமதியற்ற பத்திரபதிவு பெருமளவில் நடைபெற்று வருகிறது. அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாக, இயற்கையின் தன்னியக்க முறைகளையும் சமூக சட்டங்களையும் மீறி பரப்பும் இந்த கைவசப்படுத்தப்பட்ட பகுதிகள், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அலுவலக அதிகாரிகளின் பார்வைக்கு எட்டாத சில புரோக்கர்கள், குறிப்பிட்ட தொகையான லஞ்சத் தொகையை செலுத்தி, சட்டவிரோதமான பகுதிகளிலும் உரிமங்கள் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசின் கொள்கைகளும், மக்களின் நம்பிக்கையும் பாதிக்கப்படுகின்றன.

இவர்கள், பத்திரப்பதிவு செய்ய, முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு செய்வார்கள் என, கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து, பொதுமக்கள் குற்றச்சாட்டுவதாவது, 

சார்பதிவாளர் அலுவலகங்களிலும், முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இல்லையென்றால், 'சர்வர்' கோளாறு என கூறி, பத்திரப்பதிவை தள்ளி போடுகின்றனர். 

பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெறுவதற்கு கூட, கமிஷன் கொடுத்தால் தான் கிடைக்கிறது. ஆவண எழுத்தர்கள் என கூறி கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள்தான், நாள்தோறும் நடக்கும் பத்திரப்பதிவை நிர்ணயம் செய்கின்றனர். 

ஒவ்வொரு பத்திர பதிவுக்கும், சார்பதிவாளர் முதல் அலுவலக ஊழியர்கள் வரை பணம் தர வேண்டும் என ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்கின்றனர் என்று குற்றச்சாட்டியுள்ளனர்.

ஆவண எழுத்தர்கள் அல்லாத, சார்பதிவாளர்கள், அலுவலக ஊழியர்கள் மூலம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடமாடும் புரோக்கர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், வேலூர்  லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அலுவலகங்களில், திடீர் சோதனை நடத்தி, அரசு அலுவலர்கள், புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

அதுமட்டுமின்றி வேலூர்  மாவட்ட பதிவாளர் அலுவலகம், அதே கட்டடத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அங்கு லஞ்சமும் புரோக்கர்களின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது. 

மீண்டும் மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனைகளுக்கு உள்ளாகி கூட வேலூர் சார்பதிவாளர் அலுவலகம் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகவில்லை என்பது, அதிகாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீரழிக்கிறது. கையொப்பமிடும் அதிகாரிகளின் நேர்மையையும், சேவை சீர்திருத்தத்தையும் மீண்டும் மக்களின் நம்பிக்கைக்கு உட்படுத்துவது இன்று அவசியமாகியுள்ளது.

இவ்வாறு தொடரும் செயல்முறைகள் மீது அரசு, மற்றும் குற்றத்தடுப்பு துறை உறுதியாக செயல்பட்டு, இது போன்ற அலுவலகங்களில் முறையான நிர்வாகமும், தற்காலிகமற்ற எதிர்ப்பும் உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

வேலூர் சார்பதிவாளர்க அலுவலகத்தில் நடைபெறும் புரோக்கர்கள் நடமாட்டமும், ஊழலும் ஆதாரங்களுடன் காலச்சக்கரம் சுழற்சியில்..  விரைவில்...

No comments

Thank you for your comments