Breaking News

ஆளும் திமுக முதலாளித்துவ அரசின் கைக்குள் சுருண்ட இடது கம்யூனிஸ்ட்கள், சிஐடியூ-வையும் பணயம் வைத்த அவலம்




சென்னை: 

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுப்பணித்துறை அமைச்சரும் கூட்டணி கட்சிகளுடனான விவகாரங்களை கையாள்பவருமான எ.வ.வேலு சிஐடியு தலைவர் செளந்தரராஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் பெல் இரா.தமிழரசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆளும் திமுக முதலாளித்துவ அரசின் கைக்குள் கடந்த தேர்தலில் சுருண்ட இடது கம்யூனிஸ்ட்கள், இன்று தொழிற்சங்க அங்கீகாரம் கோரி நடந்த இறுதிக்கட்ட போராட்டத்தில் திமுக அரசின் நிர்பந்தத்திற்கு தனது தொழிற்சங்க அமைப்பான சிஐடியூ வையும் கேவலமாக பணயம் வைத்து அடிமை சாசனத்தில் கையொப்பமிட்டு  சாம்சங் போராட்டத்தினை விலக்கி கொண்டுள்ளது.

போராட்டம் விலக்கம் குறித்த அறிக்கையில் திமுக அமைச்சர்கள் மட்டுமே முன்னிலை படுத்தப்பட்டுள்ளது கேவலம்.  மறந்தும்கூட  சிஐடியூ பெயரோ, அச்சங்க அங்கீகாரம் குறித்தோ எந்த ஒரு ஷரத்தும் இல்லை.  மாறாக ஒப்பந்தத்தின் 4-வது ஷரத்தில், "சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது" என்ற அடிமை சாசனத்தை ஏற்று போராட்டத்தை விலக்கி கொண்டுள்ளது சிஐடியூ.  

இவ்வாறு தொழிலாளர்களின் நலனை புறக்கணித்துக் கையொப்பமிட்டதன் மூலம், சிஐடியூ தொழிலாளர் வர்க்கத்திற்குச் செய்த துரோகமாகும்.  

தொழிலாளர் தோழர்களே இனியாவது சிஐடியூ வின் போலி கோஷங்களை கண்டு ஏமாறாதீர்கள்.  

அண்ணா தொழிற்சங்கம் ஒன்றே தொழிலாளர்களுக்கு நிரந்தர வழிகாட்டி. ஏனெனில் அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் வழி நின்று  தமிழகத்தை தொழில் வளம் நிறைந்த மாநிலமாக மாற்றியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும், அவர்களுக்கு பணி பாதுகாப்பையும் அளித்திட்ட புரட்சி தலைவி,. இவர்கள் இருவரது அடியொற்றி கொரானாவை வென்று தொழிலாளர் நலம் காத்து தமிழகத்தில் பொற்கால ஆட்சி அளித்திட்ட புரட்சித் தமிழர் நாளைய முதல்வர் அஇஅதிமுக வின் பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டலோடு அண்ணா தொழிற்சங்கங்கள் தமிழகத்தில் தொழிலாளர் நலனை பேணிகாத்து வருகின்றனர்.

அக்டோபர் 17-ம் தேதி தனது 53 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஇஅதிமுக-வை 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஐயா எடப்பாடியார் அவர்களை முதல்வராக்கிட தொழிலாளர் வர்க்கம் சூளுரைத்திட இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம் என்று   தெரிவித்துள்ளார். 




No comments

Thank you for your comments