கோவையை கலக்கும் 3 நம்பர் லாட்டரி..! - தடை செய்யுமா காவல்துறை ?
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் புத்தூர் கிராமத்தில் ஒரு இளைஞர் காரில் அமர்ந்து கொண்டு ஹாயாக 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்து வருவதாக அப்பகுதியில் கூறப்படுகிறது. மேலும் புத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலேயே இளைஞர் ஒருவர் காரில் 3 நம்பர் லாட்டரி நடத்துவதாக அப்பகுதி மக்களிடையே பெரும் அளவில் பேசப்பட்டுகிறது.
இதனால் அந்த நபர் தினமும் காலை காரில் வந்து பள்ளியின் அருகில் நிறுத்தி கொள்வாராம்.. அப்பகுதி அப்பாவி மக்கள் தங்களுக்கு அதிஷ்டம் வந்து விட்டது என்று அவரிடத்தில் 3நம்பர் லாட்டரி போட்டு மிகவும் நலிவடைந்து வருகின்றனர். இதனால் தங்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொது மக்கள் தெரிவிப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
எனவே அப்பகுதியில் 3நம்பர் லாட்டரி நடத்தும் அந்த நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்று யாரும் இப்பகுதியில் 3நம்பர் லாட்டரி சீட்டு நடத்தாமல் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments