காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் மனிதச்சங்கிலி
காஞ்சிபுரம், அக்.8:
விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் 4 இடங்களில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் பாலாஜி தலைமையில் இந்திரா காந்தி தெருவில் உள்ள அண்ணா அரங்கம் முன்பாகவும்,காந்தி ரோடு தேரடி பகுதியில் மேற்குப் பகுதி செயலாளர் எம்பி ஸ்டாலின் முன்பாகவும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
வடக்குப்பகுதி செயலாளர் ஜெயராஜ் தலைமையில் சங்கர மடம் அருகிலும்,தெற்குப் பகுதி செயலாளர் கோல்டு.ரவி தலைமையில் ஓரிக்கையிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அண்ணா அரங்கம் முன்பாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீர் செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மின்கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு குறித்த கண்டனக் கோஷங்களையும் தொண்டர்கள் எழுப்பினார்கள்.
No comments
Thank you for your comments