Breaking News

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மோரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை

திருவள்ளூர், அக்.3-

திருவள்ளூர் மாவட்டம்  வில்லிவாக்கம் ஊராட்சி  ஒன்றியத்தில்  காந்தி ஜெயந்தி முன்னிட்டு  மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி  கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் மோரை ஊராட்சி மன்ற  தலைவர் திவாகர் தலைமை தாங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் துணைத் தலைவர்  வார்டு உறுப்பினர்கள் மற்றும் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் துணை பிடிஒ இளங்கோவன் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஞான ஜோதி தீபா மற்றும் டி 7 காவல் உதவி ஆய்வாளர் பச்சமுத்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் கூறுகையில், நான் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று இது நாள் வரை 100க்கு மேற்பட்ட சாலைகள் குடிநீர் தொட்டிகள் குளங்கள் சீரமைத்தல் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி புதிய பள்ளிக்கூட கட்டிடங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இந்தப் பகுதி மக்களுக்காக என்றும் பாடுபட தயார் என்று கூறி நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் நபர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி உணவு வழங்கி சிறப்பித்தார். 

இதனைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய சேவியர்கள் ஞான ஜோதி தீபா கலந்து கொண்டு நம் வீட்டை சுற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் கொசுக்கள் சேராத வகையில் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் சுரம் அடித்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும் அதுவும் அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டும் உங்களுக்காகத்தான் நாங்கள் பணியாற்றி கொண்டு இருக்கிறோம் ஆகவே மருந்தகங்கள் சென்று மருந்துகளை வாங்காமல்  அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பது குறித்தும் முழுகாமல் இருக்கும் பெண்கள் இரண்டு மாதத்திற்குள் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 டி 7 காவல் உதவி ஆய்வாளர் பச்சமுத்து தங்கள் பகுதியில் புதியதாக யாரேனும் குடியேறினால் அவர்களுடைய முழு  விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதன்  அதன் பிறகு வீடு வாடகைக்கு விட வேண்டும் ஏதேனும் அவர்களைப் பற்றி தவறான கருத்துகள் வந்தால் உடனடியாக 100க்கு போன் செய்ய வேண்டும் யாரேனும் சந்தேக படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிய வேண்டும் நாங்கள் 24 மணி நேரமும் உங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டு இருப்போம் என்றும் தெரிவித்தார் இந்தப் பகுதியில் பாய்ஸ் கிளப்பிற்க்கு  நிரந்தரமாக பட்டாய் வழங்கி செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் 

இதுதான் தற்போது நடக்கும் இந்த பகுதியில் கடைசியான கிராம சபை என்றும் இதன் பிறகு ஆவடி மாநகராட்சியில் இணைக்கப்படும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தெரிவித்தார். இதனால் வரைக்கும் எங்களுக்கு ஒத்துமை கொடுத்த அனைத்து ஊர் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்து மீண்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் மீதம் உள்ள பணிகளையும் சரி செய்வேன் என்று உறுதி அளித்தார்

No comments

Thank you for your comments