கீழம்பி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ எழிலரசன் பங்கேற்பு
திமுக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்பு
காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழம்பி ஊராட்சியல் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ,வடகிழக்கு பருவமழை,கொசுக்கள் மூலம் டெங்கு பரவுதலை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிடவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர்,சாலை வசதி,பேருந்து வசதி,உடற்பயிற்சி கூடம்,நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை, உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்பட்ட மனுக்களை உடனடியாக பரிசிலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து,தமிழக அரசும் தமிழ்நாடு முதலமைச்சரும் மக்களின் நலனுக்காக வழங்கியுள்ள திட்டங்கள் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பா உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments