Breaking News

சேதமடைந்தநிலையில் இயங்கும் தனியார் பேருந்தால் விபத்து ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரம், ஆக.24

காஞ்சிபுரம் திருவள்ளூர் இடையே வண்டி எண்.TN.20 BE 5555 நம்பர் கொண்ட தனியார் பேருந்து இயங்கி வருகிறது.


காஞ்சிபுரத்திலிருந்து சின்ன காஞ்சிபுரம்  வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் வழியாக திருவள்ளூரை நோக்கி தனியார் பேருந்து செல்கிறது.  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை நேரம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆவசர அவசரமாக வேலைக்கும் பள்ளிக்கும் செல்கின்றனர்


இவர்கள் சாலையோரம் நடந்து செல்லும் பொழுது திருவள்ளூரை நோக்கி செல்கின்ற தனியார் பேருந்து பின்பக்கமானது சேதமடைந்து சாலை ஓரமாக செல்லக்கூடிய நபர்களை விபத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் உள்ளது.

அதனால் அந்தப் பேருந்து மீது போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர் 

இன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் ஒருவர் மீது பேருந்தின் பின்பக்கம் உரசியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

தொடர்ந்து தனியார் பேருந்து வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் பேருந்தின் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

No comments

Thank you for your comments