தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருமத்தம்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் நிரந்தர தூய்மை காவலர்களாக பணியாற்றும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா.ஜி.மனோகரன் மற்றும் கருமத்தம்பட்டி திமுக நகர கழகச் செயலாளர் க. மனோகரன் ஆகியோர் தலைமை வகித்து 30க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக புத்தாடைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையாளர் சி. மனோகரன், மேலாளர் என்.ராஜேந்திரன், மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி திமுக நகர கழகச் செயலாளர் க.மனோகரன் கூறுகையில் சமீபத்தில் சென்னையில் பலத்த மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை நேரில் சந்தித்து வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் போது நமது தமிழக முதல்வர் தூய்மை பணியாளர்களாகவே அவர்களுடன் சேர்ந்து களம் இறங்கி அனைத்து பணிகளையும் செய்தார் என்பது நினைவுகூர்ந்து தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் தூய்மை காவலர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும் தூய்மை காவலர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு தேநீர், பிஸ்கட், மற்றும் அசைவ பிரியாணி கொடுத்து வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வரின் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களும் அவர்களுடைய குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அவர்களுக்கு எங்கள் நகராட்சி சார்பில் இலவச புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களுடன் சிறப்பு செய்துள்ளதாக கூறினார்.
No comments
Thank you for your comments