Breaking News

காஞ்சிபுரத்தில் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் விழிப்புணர்வு பதாகை வெளியீடு

காஞ்சிபுரம், அக்.24:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு விழா ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றது.



காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சமூக நல அலுவலர் சத்யா,வாரியத்தின் உறுப்பினர் கல்யாணந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூகநலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்,இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்,நிதியினை முறையாக கையாளுதல்,சொத்துரிமை,குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு,இலவச சட்ட உதவி ஆகிய அனைத்தும் விரிவாக விளக்கி கூறப்பட்டது.

இக்கருத்தரங்கில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,நலிவுற்ற பெண்கள்,ஆதரவற்ற பெண்கள்,பேரிளம் பெண்கள், கைம்பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக சமூக நலத்துறை சார்பில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்.

No comments

Thank you for your comments