தீபாவளி ஸ்பெஷல் - பூண்டு முறுக்கு
தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.
தேவைப்படும் பொருட்கள்
- அரிசி மாவு,
- பூண்டு,
- பெருங்காயம்,
- சீரகம், எள்,
- வெண்ணெய்,
- உப்பு,
- எண்ணெய்.
செய்முறை
முதலில் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும்.
வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்த பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும்.
பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு தயார்.
Post Comment
No comments
Thank you for your comments