Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவதார தின விழா,கோயில் பணியாளர்களின் பால்க்குட ஊர்வலம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவதார நட்சத்திரமான ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கோயில் பணியாளர்கள் சங்கர மடத்திலிருந்து ஆலயத்துக்கு பால்க்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


ஐப்பசி மாத பூர நட்சத்திரம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார திருநாளாகும்.ஆண்டு தோறும் இத்திருநாளன்று காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தான சிப்பந்திகள் சார்பில் பால்க்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு ஐப்பசி பூர நட்சத்திரத்தையொட்டி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் பால்க்குடங்களை வைத்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் மணியக்காரர் சூரியநாரயணன்,ஆலய ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் கோயில் சிப்பந்திகள்,பக்தர்கள் என ஏராளமானோர் பால்க்குடங்களை எடுத்துக் கொண்டு ராஜவீதிகள் வழியாக வந்து ஆலயம் வந்து சேர்ந்தனர்.

பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,அதனைத் தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

பால்க்குடம் ஊர்வலம் தொடக்க விழாவில் கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன், ஐயப்பகுருசாமி பாண்டுரெங்க சுவாமி,பாஜக பிரமுகர் காஞ்சி.ஜீவானந்தம்,விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments