பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளை மாணவர் இல்லம் கடந்த 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இதில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களிலும் இந்த பள்ளியில் இருந்து வெளிவரும் தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் தற்போது 208 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்த மாணவர் களுக்கு ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினர். மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி கேர் நிறுவனத்தின் இயக்குநர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீவித்யா, அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆசி ரியர்கள், மாணவர்கள், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments