தீபாவளி ஸ்பெஷல் - குல்கந்து ஜாமூன்
தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.
தேவைப்படும் பொருட்கள்
பிரட்,
குல்கந்து,
குங்குமப்பூ,
சர்க்கரை,
ஏலக்காய் பொடி,
எலுமிச்சை சாறு,
நெய்,
எண்ணெய்.
செய்முறை
ஓர் சூடான கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி,குங்குமப்பூ, துளியளவு எலுமிச்சை சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார்.
பிரட்டின் ஓரங்களை நீக்கி அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்துகொண்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
பின்பு அதனை மெதுவான மாவின் பதத்திற்கு நன்றாக பிசையவும். இப்போது அதனை உருண்டை பிடித்து கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார்.
இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும்.
சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறம் வருமளவிற்கு நன்கு பொரிக்கவும்.
பொன்னிறமாக உருண்டைகள் பொரிந்தபின்பு அதனை தயாரித்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
இப்போது எச்சில் ஊறும் சுவையான குல்கந்து ஜாமூன் சுவைப்பதற்கு தயார்.
No comments
Thank you for your comments