அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2025 - க்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 04 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 - க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 04 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 - க்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று (29.10.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 04 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025- க்கான வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேற்று வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,55,188. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,58,818, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,96,153, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 217.
மேலும் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி 29. திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையமும், 36. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 01 வாக்குச்சாவடி மையம் (Part No 24 - Part No 26 உடன் ) இணைக்கப்பட்டும், 01 வாக்குச்சாவடி மையம் புதியதகவும் மற்றும் 37. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 01 வாக்குச்சாவடி மையமும் என புதியதாக 04 வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1401 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் (29.10.2024 ன் படி) விவரம் பின்வருமாறு.
சட்டமன்ற தொகுதியின் எண். மற்றும் பெயர் | 29.10.2024 அன்றைய வாக்காளர்களின் விவரம் | |||
ஆண்கள் | பெண்கள் | இதர | மொத்தம் | |
28. ஆலந்தூர் | 190874 | 195863 | 62 | 386799 |
29. திருப்பெரும்புதூர்(தனி) | 188521 | 199989 | 69 | 388579 |
36. உத்திரமேரூர் | 128905 | 138970 | 52 | 267927 |
37. காஞ்சிபுரம் | 150518 | 161331 | 34 | 311883 |
மொத்தம் | 658818 | 696153 | 217 | 1355188 |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் 29.10.2024 முதல் 28.11.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிமையங்களிலும் 09.11.2024 மற்றும் 10.11 .2024 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2024 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேண்டி 09.11.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post Comment
No comments
Thank you for your comments