பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம், அக்.24:
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம். நிகழாண்டு இப்பயிற்சி நிலையத்தில் பட்டயப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் 165 பேருக்கு பயிற்சி நிலைய முதல்வர் அ.வெங்கட்ரமணன் பட்டங்களை வழங்கி பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் சாவித்திரி கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விளக்கி பேசினார்.
இந்நிகழ்வில் பயிற்சி நிலைய கல்லூரி விரிவுரையாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments