எம்.பி ராசாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுகவினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நீலகிரி பாராளுமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் அலுவலகத்தில் ஆ.இராசாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய திமுகவினர்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி, மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் திமுக துணை பொது செயலாளரும்,நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா அவர்களின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையை சேர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம் சிறப்பு ஏற்பாட்டில் எம்.பி ராசாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அப்போது விழாவில் மிகப்பெரிய கேக் வெட்கப்பட்டது.
அதன் பின்பு கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்டமும் இனிப்பும் வழங்கிப்பட்டது. அதன் பின்னர் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராசாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கட்சி நிர்வாகிகள் கோஷம் எழுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ராசாவின் நேர்முக உதவியாளர் ரோச்தனசாமி, மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர்கள் பா.முனுசாமி, முகமது யூனிஸ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரஸ்குமார், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கணேஷ் மூர்த்தி, சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் கே.மனோகரன்,
மீனவர் அணி அமைப்பாளர் ராம் குட்டி, மீனவர் அணி துணை அமைப்பாளர் பாபு ஆகியோருடன் திமுகவின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆ ராசாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments
Thank you for your comments