Breaking News

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை ஆர்பாட்டம்

கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை ஆர்பாட்டம் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு தலைமையில் நடைபெற்றது..



ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் சாதி வாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து நிறுவன தலைவர் தனியரசு கூறுகையில் இந்திய  ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு சாதிவாரியாக  மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை  பகிர்ந்தளிக்க வேண்டுமென்று  ஒட்டுமொத்த நாட்டு மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.



ஆனால் ஆளுகின்ற பாஜக, காங்கிரஸ், அரசு தமிழ்நாட்டில்  திமுக, அதிமுக அரசு இப்பொழுது ஆளுகின்ற திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தாமதிக்கிறார்கள் அதுவும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மதங்களைக் கடந்து 75 விழுக்காடு மக்களினுடைய இட ஒதுக்கீட்டு உரிமையை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து இந்த மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.



மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சாதி மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் நமது இயக்கத்தில் உள்ளனர். அவர்களின் பேராதரவோடு நாங்கள் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம் எனவே மத்திய மாநில அரசுகள் எங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று தெரிவித்தார்.



ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பரமசிவம் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பரசு  மாவட்ட தலைவர் கொங்கு அருள், துணைத் தலைவர் அருள் மொழி, கொள்கை பரப்புச் செயலாளர் தினேஷ் குமார், தெற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சக்திவேல் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .





No comments

Thank you for your comments