Breaking News

திட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் குருநல்லிபாளையம் கிராமத்யை அடுத்த கோதவாடி குளத்திற்கு, குளம் பாதுகாப்பு அமைப்பின் தீவிர முயற்சியால் குளத்தை ஆய்வு செய்ய திட்டக்குழு உறுப்பினரும் நிதி மற்றும் வரிக்குழு உறுப்பினரும் விவசாய உற்பத்தி உறுப்பினருமான செந்தில்குமார் வருகை புரிந்தார். இந்நிகழ்வில் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி பொன்னாடை போற்றி வரவேற்றும்,குளத்திற்கு தண்ணீர் விடுவது சம்பந்தமாக கோரி மனு அளித்தார்.


அதனைதொடர்ந்து குளம் சுற்றியுள்ள தெற்கு கடை மற்றும் வடக்கு கடை மதகு மற்றும் நீர்வழிப் பாதைகள், வடசித்தூர் செட்டிக்காபாளையம் கிளை வாய்க்கால், 15வது மற்றும் 20வது கிளை வாய்க்கால், மற்றும் மெட்டுவாவிகிளை வாய்க்காலை பார்வையிட்டு, பச்சார் பாளையம் மெயின் வாய்க்கால் மற்றும் பல்வேறு முக்கிய பாதைகளை ஆய்வு செய்தனர். 

உடன் கோவை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அட்மா சுரேஷ், மற்றும் கோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments