Breaking News

காலச்சக்கரம் செய்தி எதிரொலி - உயிர் பலி வாங்கிய வேகத்தடை அகற்றம்

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த பட்டாபிராம் தண்டுறை நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, காலச்சக்கர நாளிதழில் அக்டோபர் 13ம் தேதி “வேகத்தடையால் உயிரிழப்பு  -  சோகத்தில் கிராம மக்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.


இந்த செய்தியின் எதிரொலியாக, இன்று காலை பட்டாபிராம் போக்குவரத்து காவலர்கள் அதிரடியாக அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர். 

இதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்களும், வாகனத்தில் செல்வோரும் போக்குவரத்து காவலர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்தனர்.

காலச்சக்கரம் நாளிதழ் செய்தி வாயிலாக ஏற்பட்டுள்ள மாற்றத்திற்காகவும், சமூகத்தில் நிகழும் நல்ல மாற்றங்களுக்கு முக்கிய பங்காற்றியதற்காகவும் உண்மையை உரக்கச்சொல்லும் "காலச்சக்கரம்" நாளிதழ்க்கு நன்றியை தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை, புறநகர் பகுதிகளில் நடக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மக்கள் வலிமையுடன் முன்னேறுவது எவ்வாறு சாத்தியமென காட்டுகிறது.


🔥 Also Read : தொடர்புடைய செய்தி Click here  வேகத்தடையால் உயிரிழப்பு  -  சோகத்தில் கிராம மக்கள்


 🔥 அறிவிப்பு:

உங்கள் பகுதியின் குறைகளை k24tamilnews@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9360006677 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும். உங்கள் கருத்துகள் மற்றும் குறைகள் காலச்சக்கரம் நாளிதழ்-இல் வெளியிடப்படும்.

No comments

Thank you for your comments