Breaking News

வேகத்தடையால் உயிரிழப்பு - சோகத்தில் கிராம மக்கள்




திருவள்ளூர், அக்.13-

திருவள்ளூர் மாவட்டம் தண்டுறை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது, கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 


திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் தண்டுறை பகுதியில் கடந்த வாரம் புதன் அன்று புதியதாக வேகத்தடை அமைத்திருந்தனர்.  இதற்கு மறுநாள் வியாழக்கிழமை அன்று சுமார் மாலை 3 மணி அளவில் அணைக்கட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  புதியதாக அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையினை கவனிக்காமல் சென்றதால் இவருடைய இருசக்கர வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சோதித்த டாக்டர் இவருக்கு ஒன்றும் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர். 

பிறகு தலை வலிக்கிறது என்று அவர் தெரிவித்தார், இந்நிலையில், உடனடியாக ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். ஸ்கேன் செய்து பார்த்ததில், தலையில் பலமாக அடிபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர், உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார். 

இதனை தொடர்ந்து, இவரை சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி அறிந்த அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  சுரேஷ்க்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மரணத்திற்கு காரணம் வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசாததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு வேகத்தடை உள்ளது என்பதே அருகில் வந்த பின்புதான் தெரிகிறது, இதனால் தடுமாறி கீழே விழுகின்றனர். விபத்தை தவிர்ப்பதற்காகத்தான் வேகத்தடை, ஆனால் இந்த வேகத்தடையே விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்பது வெட்ககேடானாது. 

இன்னும் பல இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையால் தடுமாறி விழுந்துள்ளதாகவும், இவ்வாறு நிகழ்வதை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.

 

No comments

Thank you for your comments