Breaking News

களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது - கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம், அக்.7:

காஞ்சிபுரம் மாநகராட்சியின் விரிவாக்கத்தையொட்டி களியனூர் ஊராட்சியை இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அக்கிராம மக்கள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


களியனூர் கிராமத்தினர் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது களியனூர் ஊராட்சி.இக்கிராமத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைவராக இருந்து நிர்வகித்து வருகிறார்.களியனூர் கிராமத்து மக்கள் விவசாயத்தையும், கூலி வேலையையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டம் மூலமாகவே பலரும் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் களியனூர் ஊராட்சியை இணைக்கப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

களியனூர் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

No comments

Thank you for your comments