கோவையில் மின்வாரியங்களுக்கு இடையேயான 46வது ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் 46வது அகில இந்திய மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா மின்சார வாரிய விநியோக இயக்குனர் கு. இந்திராணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாநிலங்கள் அளவில் கலந்து கொண்ட மின்வாரியங்களில் பணியாற்றிய வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு மின்வாரியம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் விளையாட்டு துணை இயக்குனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜோஸ்னா சின்னப்பா, விளையாட்டு அதிகாரி சுபா வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளரர்களாக கலந்து கொண்டனர்.
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் க நந்தகுமார் முன்னிலை வகித்தார். உடன் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், தலைமை பொறியாளர் குப்புராணி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதில் மின்வரிய ஊழியர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments