Breaking News

இருளர் இன மக்கள் 24 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா - காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம், அக்.7:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருளர் இன மக்கள் 24 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 405 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அம்மனுக்கள் சார்ந்த துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்து விரைவாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் உத்தரமேரூர் வட்டாரத்தைச் சேர்ந்த இருளர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 24 பேருக்கு ஆட்சியர் இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும் வழங்கினார்.கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments