மாங்காட்டில் வடமாநில தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை
பூந்தமல்லி :
மாங்காடு பரணி புத்தூர் லீலாவதி நகரில் பிரபாகரன் என்பவர் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு இங்கு தங்கி பணிபுரியும் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அணில் பாண்டே ( வயது 43 ) இதே மரக்கடையில் வேலை செய்யும் குமார் (வயது 48) என்பவர் குமார். குமாரின் செல்போன் மற்றும் சார்ஜரை அணில் பாண்டே மறைத்து வைத்திருந்து குமாரை கிண்டல் செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த குமார் இரும்பு கம்பியால் அணில் பாண்டே தலையில் அடித்து கொலை செய்தார்.
இதுபற்றி தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அணில் பாண்டே பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைப் பற்றி மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை இன்று திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments