Breaking News

எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம்

 கோவை : 

கோவை குனியமுத்தூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 


இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கையில் திமுக அரசுக்கு எதிரான வாக்கியங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர். 

மனித சங்கிலி போராட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகள் மக்களுக்கு எதையுமே செய்யாமல் ஆட்சி நடத்துகின்றனர் 

ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கபடும் அளவிற்கு வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் மட்டுமே அடிக்கடி வரி உயத்தப்படுகிறது. இதனால் ஜோரக வசூல் வேலை மட்டுமே நடக்கிறது. எந்த வளர்ச்சி திட்டமும் நடக்கவில்லை  கோவைக்கு இத்தனை பாலங்கள் வர காரணம் எடப்பாடியார் தான். அனைத்து பாலங்கள் எடப்பாடியார் பெயரை தான் சொல்லும்.எளிமையான முதல்வராக இருந்து பிரமாண்டமான திட்டங்களை கொடுத்தவர் 

கோவை அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் மேம்படுத்தபட்டது, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் 1 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திடும் ஆனால் இன்னும் திமுக செய்யவில்லை. 

ரொம்ப கேவலமாக உள்ளது எதையும் செய்யாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். காவல்துறையினர்  கைகள் கட்டப்பட்டுள்ளது. எங்கும் போதை பொருள் விற்கபடுகிறது. வருங்காலம் அழிந்து வருகிறது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்..

மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு தலையிட்டு தொழில்களுக்கு கடன்கள் வழங்கி  பாதுகாக்க வேண்டும்.  போதைப்பொருட்கள்  விற்பனையை உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். இனி 1 வருஷம் தான் இந்த ஆட்சி, அடுத்து எப்ப தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தான் முதல்வர் என்று கூறினார்

No comments

Thank you for your comments