Breaking News

கிராம பஜனைக் குழுக்களுக்கு இசைக்கருவிகளை வழங்கினார் காஞ்சி சங்கராசாரியார்

காஞ்சிபுரம்,அக்.14:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை பஜனைக் குழுவினர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கி ஆசீர்வதித்தார்.காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லூரி வளாகத்தில் காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கி முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். 


நவராத்திரி திருவிழாவின் நிறைவையொட்டி 5 கிராமங்களில் பஜனக் குழுக்களாக செயல்பட்டு வரும் இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம், ஹார்மோனியம், தாளம், ஜால்ரா, தபேலா உள்ளிட்ட இசைக்கருவிகளை வழங்கி ஆசீர் வதித்தார்.

இதனையடுத்து முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஏனாத்தூர் சங்கரா செவிலியர் கல்லூரி தலைவர் பம்மல்.விஸ்வநாதன்,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமச்சந்திரன்,காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோருக்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்.

ஏனாத்தூரில் முகாமிட்டிருந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். 

திருப்பதி செல்லும் வழியில் அரக்கோணம்,பொன்பாடி,திருத்தணி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்புக்கு பின்னர் திருப்பதி செல்லும் அவர் செவ்வாய்க்கிழமை முதல் திருப்பதி முகாமில் தங்கி வழக்கம் போல சந்திரமௌலீசுவரர் பூஜைய தொடர இருப்பதாகவும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments