Breaking News

தீபாவளி ஸ்பெஷல் - நெய்யப்பம்

இந்தியாவில் வருடம் தோறும் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளிலும் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, இனிப்பில்லாமல் எந்த பண்டிகையும்  முழுமை பெறாது என்பது தான் உண்மை.

தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.


தேவைப்படும் பொருட்கள் :

  • அரிசி மாவு, 
  • கோதுமை மாவு, 
  • பழுத்த வாழைப்பழம், 
  • நறுக்கிய தேங்காய் துண்டுகள், 
  • ஏலக்காய் பொடி, 
  • வறுத்த எள், 
  • நெய், 
  • எண்ணெய்.

செய்முறை :

நறுக்கிய தேங்காய் துண்டுகளை நெய்யில் பொன்னிறம் வரும் வரையில் வறுக்கவும்.

அதன் பின்பு வெல்ல பாகு காய்ச்சி எடுத்து வைக்கவும்.

பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அரைத்து கொள்ளவும்.

இப்போது அரிசி மாவையும் கோதுமை மாவையும் ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுக்கவும்.

ஓர் பெரிய பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு, கோதுமை மாவு, வறுத்த தேங்காய் துண்டுகள், பிசைந்து அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை இட்லி மாவின் பதத்திற்கு கெட்டியாக கலக்கவும்.

பின்பு அதனை அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த எள், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்க்கவும். இப்போது நெய்யப்பத்திற்கான மாவு தயார்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து அனைத்து குழியிலும் சிறிதளவு நெய் விடவும். தயாரித்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு மாவின் இருப்பக்கத்தையும் பொன்னிறம் வரும் வரை வேகவைத்தால் சுவையான நெய்யப்பம் தயார்.

No comments

Thank you for your comments