Breaking News

காஞ்சிபுரத்தில் காவல்துறை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

காஞ்சிபுரம், அக்.30:

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகம் அருகில் ஆயுதப்படைக் காவல் பிரிவு சார்பில் காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.



ஆயுதப்படைப் பிரிவு காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகம் அருகில் காவல்துறையினர் பயன்படுத்தும் சாதாரண ரக துப்பாக்கிகள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள்,வஜ்ரா வாகனத்தில் பயன்படுத்தும் ரப்பர் புல்லட்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி ஆகியன ஏராளமானவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆயுதங்கள் கண்காட்சியை நேரில் பார்வையிட்டனர்.

காவல்துறையினர் துப்பாக்கிகளின் வகைகள், அவற்றை பயன்படுத்தும் விதங்கள் ஆகியன குறித்து விரிவாக பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

No comments

Thank you for your comments