காஞ்சிபுரத்தில் மாவட்ட தடகளப்போட்டி - எம்எல்ஏ எழிலரசன் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், அக்.22:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.போட்டிகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமை வகித்து ஒலிம்பிக் ஜோதியையும் ஏற்றி வைத்து போட்டிகளை தொடக்கி வைத்தார்.
தொடக்க விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.வெற்றிச்செல்வி,மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்,தட்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தம் உள்ளிட்ட 39 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வயது 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழும், பதக்கங்களையும் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்.
நிறைவாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் நன்றி கூறினார். வரும் நவம்பர் 6 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
No comments
Thank you for your comments