காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
காஞ்சிபுரம், அக்.22:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை நிகழ் மாதம் 21 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கியிருக்கின்றனர்.
2 வது நாளாக செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்பாக பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சங்க விற்பனையாளர்களிடம் அபராதத்தொகை வசூலிப்பதை பணியாளர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும், கடைகளில் பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும், நியாயவிலைக்கடை விற்பனையாளர்களை அவரவர்களுக்குரிய சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் வகையில் உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2வது நாளாக தொடர்ந்த வேலைநிறுத்தத்தில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்பாக ஒன்று கூடிய நிகழ்வில் சங்க மாவட்ட தலைவர் சேரன்,மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகள்,பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments