Breaking News

ஓரிக்கை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீ பற்றி எறிந்து சேதம்

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீ பற்றி எறிந்து சேதமானது.


காஞ்சிபுரம் மாநகராட்சி 44 ஆவது வார்டு வேதாத்திரி நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஓரிக்கை பகுதியில் மாருதி சுசூகி வோகனார் காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வந்தது இதனை கண்ட பாலாஜி வாகனத்தில் இருந்து வேகமாக வெளியேறினார்.

அதிர்ச்சி அடைந்த பாலாஜி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எறிந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் கார் முழுவதும் தீ பரவியதால் கார் முற்றிலும் எறிந்து நாசமானது மேலும் இது குறித்து தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments