Breaking News

தீபாவளி ஸ்பெஷல் - மடக்கு பூரி

இந்தியாவில் வருடம் தோறும் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளிலும் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, இனிப்பில்லாமல் எந்த பண்டிகையும்  முழுமை பெறாது என்பது தான் உண்மை.

தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.


சுவையான தீபாவளி பலகாரம் - மடக்கு பூரி

தேவைப்படும் பொருட்கள் :

  • கோதுமை மாவு, 
  • துருவிய தேங்காய், 
  • சர்க்கரை, 
  • நெய், 
  • முந்திரி, 
  • எண்ணெய், 
  • உப்பு.

செய்முறை :

முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை தயாரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நன்கு உலர வைத்த துருவிய தேங்காய், சர்க்கரை, நொறுக்கிய முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.

சப்பாத்தி உருட்டியை பயன்படுத்தி பூரியை தயாரிக்கவும். தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பூரியினுள் வைத்து மடித்து விருப்பத்திற்கேற்ப ஓரங்களில் வடிவமைக்கவும்.

ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை பொன்னிறம் வரும் வரையில் நன்கு பொரித்தெடுக்கவும்.

இப்போது குழந்தைகளுக்கு பிரியமான மடக்கு பூரி சுவைப்பதற்கு தயார்.


No comments

Thank you for your comments