லஞ்ச கேட்டதற்கு -ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி தண்டனை
புகார்தாரர் திரு.ஜான் த/பெ எழுமலை சின்ன செங்குன்றம், மல்ரோசாபுரம், செங்கற்பட்டு மாவட்டம் என்பவர் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் கதர் கிராம தொழில்கள் அலுவலகத்தில் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற மனு அளித்து இருந்தார்,
அம்மனு சம்மந்தமாக அவ்வலுவகத்தில் பணிபுரிந்த திரு.P.சக்கரை வயது 61 த/பெ. பெரியபையன் தேனீ வயலவர் நிலை III என்பவரை கடந்த 29.12.2008 அன்று சந்தித்து கேட்டபோது மேற்படி மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள, பணம் ரூபாய் 1000/- தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாகவும் லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் மேற்படி புகார்தாரர் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரில் கடந்த 7.01.2009 அன்று வழக்குப் பதிவு செய்து , லஞ்சப்பணம் ரூ1000/- வாங்கிய போது மேற்படி எதிரி திரு.சக்கரை என்பவர் கைது செய்யப்பட்டார் மேற்படி வழக்கில் புலனாய்வு முடிக்கபட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி திரு.M.வசந்தகுமார் MA,BL, அவர்கள் முன்பாக நடந்து வந்தது.
மேற்படி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இன்று 18.10.2024ம் தேதி எதிரி சக்கரையை குற்றவாளி எனகூறி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனை அபராதம் ரூபாய் 1000/- மற்றும் பிரிவு 13 ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனை அபராதம் ரூபாய் 1000/ விதித்து தீர்ப்பளித்தார்
No comments
Thank you for your comments