Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை ரூ.59.16 லட்சம்

காஞ்சிபுரம், அக்.24:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ.59.16லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில்.இக்கோயில் உண்டியல்கள் இரண்டு திறந்து எண்ணப்பட்டது.இதில் ரூ.59,16,361 பணமாகவும், தங்கம் 163 கிராம், வெள்ளி 432 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர்,சங்கர மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன், மேலாளர் பத்ரி நாராயணன், மணியக்காரர் சூரியநாராயணன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உட்பட பலரும் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.

No comments

Thank you for your comments