காலச்சக்கரத்தின் எதிரொலி : குண்டும் குழியுமாக இருந்த சாலை சீரமைப்பு
ஆவடி :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் கொண்டது இந்த நகராட்சியில் போடப்படும் சாலைகள் ஒரு ஆண்டைக்கூட கடப்பதில்லை. சாலைகள் போட்ட ஒரு சில மாதங்களிலேயே, சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லமுடியாத அவல நிலைக்கு சென்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த வேதனையை தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் உள்ள பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் சாலையில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி தொழில்நுட்ப கல்லூரி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இந்த சாலையின் வழியாகத்தான் திருவேற்காடு அம்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த வழியாகத்தான் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த சாலை அமைத்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை இந்தநிலையில் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
தற்போது மழைக்காலம் என்பதால் உடனடியாக இந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
சாலை சீரமைப்பு
இந்நிலையில், நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில், குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் விரைவாக நடவடிக்கை எடுத்து ஒட்டு சாலைகள் போடப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலைகளைப் பயன்படுத்த முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதற்காக, திருவேற்காடு ஆணையரும், நகர மன்ற தலைவரும் உறுதுணையாக இருந்து சாலை பணி நடைபெற்றதற்கும், காலச்சக்கரம் நாளிதழ் மக்கள் குறைகளை எடுத்துக்காட்டி செய்தி வெளியிட்டதற்கும் வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.
ALSO READ 🔥 தொடர்புடைய செய்தி
No comments
Thank you for your comments