ஆற்று கால்வாய் சீரமைத்து தருமாறு நீர் பாசன சங்க தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையிலிருந்து காவாந்தண்டலம் ஊராட்சிக்கு செல்லும் ஆற்று கால்வாய் சீரமைத்து தருமாறு நீர் பாசன சங்க தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா காவாந்தண்டலம் ஊராட்சியில் சுமார் 900 ஏக்கர் விவசாய நிலம் பயிர் செய்து வருகின்றனர். அப்பகுதியில் செய்யாற்று குறுக்கே வெங்கச்சேரி பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பனையிலிருந்து நீர் திறக்கப்பட்டு காவாங்கண்டலம் ஊராட்சி ஏரியில் நீர் நிரப்பப்படும் இவற்றிலிருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பகிர்ந்து கொள்வதற்காக நீர்ப்பாசன சங்கம் அமைத்து அவற்றிற்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாய நிலங்களுக்கு பற்றாக்குறை இன்றி நீர் இணை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக காவாந்தண்டலம் பகுதிக்கு வரும் வெங்கச்சேரி தடுப்பணை கால்வாய் இடிந்து விழுந்தோம் சேதமற்றும் முள் புதர்கள் காணப்படும் இருப்பதால் செய்யாற்றில் இருந்து வரும் ஆற்று நீர் காபந்தனம் ஏரிக்கு வருவதில் சிரமம் உள்ளதால் 3 ஆண்டுகளாக 900 ஏக்கர் பரப்பளவில் சரிவர விவசாயிகள் பதிவு செய்வதில்லை என குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறை மூலம் டெண்டர் விடப்பட்டு தற்சமயம் சீர் செய்ய ஆரம்பித்துள்ளனர் வருங்கால மழை காலம் என்பதால் பருவ மழைக்கு முன்பாகவே எந்த திட்டத்தின் கீழ் பணி தொடங்கினார்கள் என்று பொது மக்களுக்கு தெரியாத நிலையில் விரைந்து பணியை முடித்து வருகின்ற பருவமழையில் காவான் தண்டலம் ஏரிக்கு நீர்வர வழி வகை செய்யுமாறு நீர் பாசன சங்க தலைவர் குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது நல மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments