Breaking News

ஸ்ரீ சந்தவெளி அம்மன் கோயிலில் பால்க்குட ஊர்வலம்

காஞ்சிபுரம், அக்.13:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகாஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவுநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் பால்க்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலகமாக வந்து அம்மனை வழிபட்டனர்.


பெரியகாஞ்சிபுரம் வெள்ளைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது சந்தவெளி அம்மன் கோயில்.   இக்கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி தினசரி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நவராத்திரியின் நிறைவு விழாவையொட்டிகாஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி ஆலயத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்க்குடம் எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் மூலவருக்கு பாலாபிஷேகம் உட்பட மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவின் தலைவர் சுமதி ஜீவானந்தம் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments