காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் கோயிலில் பால்க்குட ஊர்வலம்
காஞ்சிபுரம், அக்.13:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஐயப்பா நகரில் அமைந்துள்ளது தாய் படவேட்டம்மன் கோயில். இக்கோயில் நவராத்திரித் திருவிழா இம்மாதம் 2 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் அம்மனுக்கும்,பக்தர்களுக்கும் காப்பக்கட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவையொட்டி தினசரி இரவு மூலவர் தாய் படவேட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தினசரி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.இம்மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நவராத்திரி நிறைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்களால் பால்க்குடம் எடுத்து வரப்பட்டு பக்தர்களாலேயே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பபட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இரவு மூலவர் தாய்படவேட்டம்மன் சாந்த சொரூபினி அலங்காரமும், பூ ஊஞ்சல் சேவையும்,பக்தர்கள் தாலாட்டும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் எம்.ஜி. வடிவேல்,ஆலய நிர்வாகி மாஸ்டர் கிருஷ்ணா ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments