காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவர் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.13:
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்கிரீவர் திருக்கோயில்.இக்கோயிலில் விஜயதசமியையொட்டி திராளான மாணவ, மாணவியர் பாடப் புத்தகம்,பேனா,பென்சில்,சிலேட்டு மற்றும் நோட்டுப்புத்தகம் ஆகியனவற்றை சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தனர்.
ஆலயத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் ஆலயத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து நெல்மணி நிரப்பிய தாம்பாலத்தட்டில் கோயில் அர்ச்சகர் குழந்தையின் கையைப் பிடித்து தமிழ் எழுத்துக்களான அ, ஆ என எழுதச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளுக்கு அட்சதை தூவி ஆசியும் வழங்கினர்.
No comments
Thank you for your comments